விருதுகள் / AWARDS


2011 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு, இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்ட கலைமாமணி (இயற்றமிழ் அறிஞர்) விருதினை கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து பெறுகிறார். முனைவர் இளசை சுந்தரம்.2014ம் ஆண்டில் தமிழக அரசு வழங்கும் மகாகவி பாரதி விருது (ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பு மற்றும் தங்கப்பதக்கம்) பெறுகிறார். இளசை சுந்தரம் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக அமைச்சர்கள்.திருமுருக கிருபானந்த வாரியாரின் திருக்கரங்களால் நகைச்சுவை மாமன்னர் விருது பெறுகிறார் இளசை சுந்தரம்.திருமுருக கிருபானந்த வாரியாரின் திருக்கரங்களால் நகைச்சுவை மாமன்னர் விருது பெறுகிறார் இளசை சுந்தரம். உடன் இருந்து மகிழ்பவர் வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர் மாண்புமிகு S.N.M. உபயதுல்லா அவர்கள். தஞ்சை – கரந்தை தமிழ்ச் சங்கத்தில் 6-2-1992 தேதியில் நடைபெற்றது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியார்; நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இளசை சுந்தரம் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் பாரதியாராக வேடமிட்டு மேடையில் தோன்றினார். அரங்கத்தில் உள்ளோர் கேட்ட கேள்விகளுக்கு சுடச்சுடச் சுவையாக பதில் சொல்லி மக்களைக் கவர்ந்தார். பாரதி நெறி பரப்பினார். அவருக்கு “இன்றைய பாரதி” என்ற விருது வழங்கப்பட்டது.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தை பெறுகிறார் இளசை சுந்தரம். வழங்குபவர் தமிழ்நாடு ஆளுநர் மேதகு ரோசைய்யா அவர்கள்.கலைச்செல்வர் விருது வழங்கும் அன்றைய அடிகளார்.பிரான்ஸ் கம்பன் கழகத்தின் சார்பில் இளசை சுந்தரம் அவர்களுக்கு “கம்பன்” விருது வழங்கப்படுகிறது.சிங்கப்பூர் திருமுறை மாநாடு வழங்கிய பாராட்டுப் பத்திரம்
திருமூலரின் திருமந்திரம் பற்றி இளசை சுந்தரம் ஆற்றிய உரைக்காகப் பாராட்டுஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்திய பாரதி விழாவில் ‘பாரதி பணிச் செல்வர் விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. காவல் துறை ஆணையர் திரு. ராதா கிருஷ்ணன், திரு. ஆவ்வை நடராஜன், திரு. விக்கிரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தாய்லாந்து தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கிய நகைச்சுவை சித்தர் விருது. வழங்கியவர் பண்பாட்டுக் கழகத் தலைவர் டாக்டர் இலியாஸ் அவர்கள்.தொடர் சொற்பொழிவு : கம்பராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், பெரியபுராணம் போன்ற தொடர் சொற்;பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் கோவிலில் நடந்த ஸ்ரீ அனுமத் ஜெயந்தி விழாவில் பத்து தினங்கள் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு ஆற்றிய இளசை சுந்தரம் அவர்களுக்கு “ஆன்மிகச் செல்வர்” விருதுஇயக்குநர் திலகம் நடிகர் மு. பாக்கியராஜ், நடிகை பூர்ணிமா ஆகியோர் பாராட்டு பட்டையம் வழங்குதல் உடன் இளசையாரின் துணைவியார் பேராசிரியர் ரேவதி சுப்புலட்சுமி.இளசை சுந்தரம் அவர்களின் மனிதநேயப் பணிகளைப் பாராட்டி மதுரா மனிதநேய மன்றம் வழங்கிய “மனிதநேய விருது”.காவல் துறையின் மனிதநேய அணுகுமுறை பற்றி காவல்துறையினரின் மத்தியில் உரையாற்றியதற்காக காவல் ஆணையர் க. நந்தபாலன் அவர்கள் வழங்கிய சிறப்பு பரிசு.


பாரீஸில் கம்பன் கழகம் நடத்திய பகத்சிங் நூற்றாண்டு விழா மற்றும் கம்பன் விழா இளசை சுந்தரம் பங்கேற்றார்.

பாரிசு கம்பன் கழகம் நடத்திய மாவீரன் பகத்சிங் நூற்றாண்டு விழாவில் இளசை சுந்தரம் சிறப்புரை. “கம்பன் கவிச்செம்மல்” விருது.


பாண்டிச்சேரியில் இயங்கும் அகில இந்திய சமூக நல மன்றம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் இளசையார்.


காவல் துறையின் மனிதநேய அணுகுமுறை பற்றி காவல்துறையினரின் மத்தியில் உரையாற்றியதற்காக காவல் ஆணையர் க. நந்தபாலன் அவர்கள் வழங்கிய சிறப்பு பரிசு.


இந்திய ஜேசீஸ் அமைப்பு வழங்கிய மாநிலத்தில் சிறந்த இளைஞருக்கான விருது.


மதுரை ஆதீனம் வழங்கும் ‘சைவ சித்தாந்த வித்தகர்’ விருதைப் பெறுகிறார் இளசை சுந்தரம்.


பாரீஸில் நடைபெற்ற கலைவாணர் N.S.K. விழாவில் இளசை சுந்தரம் “நகைச்சுவை பேரொளி” விருது.


கனடா உதயன் பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வழங்குபவர் கனடா நாட்டின் பிரிமியர்.


மலேசியா அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் வழங்கப்பட்ட இலக்கிய பேரொளி விருதுவேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ச் செம்மல் விருது.


மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் வழங்கிய சேவை விருது.


கனடா அருள்மிகு மீனாஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வழங்கப்பட்ட ஆன்மிகச் சுடர் விருது.