முனைவர் இளசை சுந்தரம் வாழ்க்கை குறிப்பு

பெயர்:முனைவர் இளசை சுந்தரம்
பிறந்த ஊர்:எட்டையபுரம்
பிறந்த தேதி:16.7.1946
பெற்றோர்:A. சீனிவாசன் - S. சீனியம்மாள்
மனைவி:முனைவர் ரேவதி சுப்புலட்சுமி
படிப்பு:பி.ஏ., பி.எட்., - வ.உ.சி. கல்லூரி, தூத்துக்குடி எம்.ஏ., - மதுரை காமராசூர் பல்கலைக்கழகம், மதுரை பி.எச்.டி. – அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
பணி:அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் மற்றும் பொதிகை தொலைக்காட்சி, மதுரை (ஓய்வு)
தொடர்பு முகவரி :

Dr.இளசை சுந்தரம்
நிர்மல் BS-3,
அக்ரினி வளாகம்,
மதுரை - 625003
M: 98430 62817


ஒலிபரப்பு பணி

முப்பது ஆண்டு காலம் தமிழகத்தின் பல்வேறு வானொலி நிலையங்களில் பணியாற்றியவர். சென்னை வானொலியின் கல்வி ஒலிபரப்புப் பிரிவுப் பணி. திருச்சி வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சிக்கான வானொலி அண்ணா இலக்கிய நிகழ்ச்சிகளின் அமைப்பாளர், வானொலி நாடகங்களை எழுதியும், இயக்கியும் உள்ளார்.

‘நகைச்சுவை அரங்கம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களைக் கவர்ந்தார். ‘மொழியாகும் ஒலிகள்’ என்ற புதுமை நிகழ்ச்சியைப் போட்டிக்காகப் படைத்து அகில இந்திய அளவில் பரிசுடன், ஆகாஷ்வாணி என்ற சிறப்பு விருது பெற்றார். திரு. தென்காசி சுவாமிநாதன் அவர்கள் வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் சொல்லி வந்த ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியை ஐந்து ஆண்டுகள் வழங்கியவர்.


எழுத்தாளர் :

மாணவப் பருவத்திலேயே பல கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் வென்று பரிசுகளைப் பெற்றுள்ளார். ஆவை தொகுக்கப்பட்டு, ‘சாதகப் பறவைகள்’ என்ற நூலாக வெளிவந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அது பாடநூலாக மூன்றாண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டது. பல தன்னாட்சி கல்லூரிகளிலும் பாடநூலாக ஆக்கப்பட்டது. பல்துணை நூல்கள் 20 நூல்கள்.


சொற்பொழிவாளர்

ஆன்மீகம், தத்துவம், தன்னம்பிக்கை, வாழ்வியல் போன்ற கருத்துக்களை நகைச்சுவை கலந்து பேசுவதில் வல்லவர். முகாபாரதம், கம்பராமாயணம், கந்தபுராணம் தொடர் சொற்பொழிவுகளை நிகழத்தி வருபவர். காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் தொடர்ந்து 50 ஞாயிற்றுக்கிழமைகள் (ஓராண்டு) ‘சிவகாம புராணம்’ தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியவர், பள்ளிகளில், கல்லூரிகளில், நிறுவனங்களில் ஆளுமைத் திறன் வளர்ச்சி பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.


பட்டிமன்ற நடுவர் :

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல பட்டிமன்றங்களில் பங்கேற்று பிறகு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து நடத்தியவர். நடத்தி வருபவர். பல வெளிநாடுகளிலும், தமிழக தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி வருபவர்.


நூலாசிரியர் :

1. சாதகப் பறவை சிறுகதைத் தொகுப்பு

2. நகைச்சுவை நந்தவனம் பெருந்தலைவர் காமராசர்

3. நகைச்சுவை நந்தவனம் பெருந்தலைவர் காமராசர்

4. ஆன்மிகம் அறிவோம்

5. நம்மை நாமே செதுக்குவோம்

6. வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்

7. வாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்

8. பாரதி காட்டும் சமுதாயம்

9. தியாகி கக்கன்

10. வானொலி வளர்த்த தமிழ் - ஆய்வு நூல

11. நீங்களும் மகுடம் சூடலாம்

12. நீங்களும் வாகை சூடலாம்

13. நீங்களும் சிகரம் தொடலாம்

14. நீங்களும் வெற்றி பெறலாம்

15. வாசலுக்கு வரும் நேசக்கரம் (பல்சுவைக் கட்டுரைகள்)

16. விடியலின் வெளிச்சம் (கவிதைத் தொகுப்பு)

17. தோழர் ஜீவா (வாழ்க்கை வரலாறு)

18. சிகரத்தைத் தொட சிந்திக்கலாம் வாங்க

19. இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்

20. பெருந்தலைவர் வாழ்வில் 200 நிகழ்ச்சிகள்


ஆராய்ச்சியாளர் :

வானொலிவளர்த்த தமிழ் ஆய்வு ஏட்டுக்காக காரைக்குழ அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஆண்ணாலை பல்கலைக்கழகத்தில் பாரதியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு, மூன்று தினங்கள் (தெய்வீகம், தேசியம், சமூகம்) பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி உள்ளார். திருக்குறள் மாநாடு, கம்பன் கழக நிகழ்ச்சிகள் சிலப்பதிகார ஆய்வரங்கம் போன்றவற்றில் பங்கெடுத்துள்ளார்.


பாரதி இன்று வந்தால் :

இதில் பாரதியாராக வேடமிட்ட புதுமை நிகழ்ச்சியை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலத் தமிழ் சங்கங்களிலும், அமெரிக்கா, கனடா, பாரிஸ், ஜெர்மனி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளிலும் நடத்தி பாரதி புகழ் பரப்பியுள்ளார்.


இதுவரை பெற்றுள்ள விருதுகள் :

1. தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் இயற்றமிழ் அறிஞருக்கான கலைமாமணி விருதும், பொற்பதக்கமும்.

2. ‘வானொலி வளர்த்த தமிழ்’ என்ற இவரது ஆய்வேட்டின் சிறப்புக் கருதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

3. ஆகில இந்திய அளவில் சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கான ஆகா~;வாணி தேசிய விருது. இவரது ‘மொழியாகும் ஒலிகள்’ என்ற நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வானொலி நிலையங்களிலும் இந்நிகழ்ச்சி ஒலிபரப்ப்பட்டது.

4. இவரது நகைச்சுவை சிறப்பைப் பாராட்டி, திருமுருக கிருபானந்த வாரியார் ‘நகைச்சவை மாமன்னர்’ விருதினை வழங்கினார்.

5. குன்றக்குடியின் முந்தைய ஆதீனகர்த்தர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘கலைச்செல்வர்’ என்ற விருதினையும் ஆதீன பொற்பதக்கத்தையும் வழங்கியுள்ளார்.

6. பிரான்சு தலைநகர் பாரிசில் நடைபெற்ற மகாகவி பாரதியார் விழாவில் பாரதி போலவே வேடமிட்டு மேடையில் தோன்றி, அரங்கில் உள்ளோர் கேட்ட வினாக்களுக்கு உடனுக்குடன் சுவையான பதில்கள் வழங்கியதால் ‘இன்றைய பாரதி’ என்று விருது பெற்றுள்ளார்.

7. தாய்லாந்து, பேங்காங் தமிழ்ச் சங்கத்தில் ‘இன்சொல் வேந்தர்’ என்ற விருது.

8. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் ‘நகைச்சுவைக் கடல்’ என்ற விருது.

9. ஜெர்மனி ஹம் நகரில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயத்தில் இவர் நிகழ்த்திய ஆன்மீக தொடர் சொற்பொழிவுக்காக ‘சமய உரைச் சக்கரவர்த்தி’ என்ற விருது.

10. கனடா அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் ‘ஆன்மிகச்சுடர்’ என்ற விருது.

11. லண்டன் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் ‘சொற்றமிழ் வேந்தர்’ விருது.

12. லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ‘இலக்கியச் செம்மல்’ என்ற விருது.

13. பாரிசு கம்பன் கழகத்தில் ஆற்றிய பேருரைக்காக கம்பன் கவிச்செம்மல் விருது.

14. மலேசியா – நகைச்சுவை சித்தர் விருது

15. சிங்கப்பூர் - சிரிப்பு நகரம்

16. கலிபோர்னியா (அமெரிக்கா) – நகைச்சுவைச் சுரங்கம்

17. இலங்கை, கொழும்பு நகரில் மயூரா அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ‘விவிதகலா வித்தகர்’ விருது. புதுச்சேரி – மத நல்லிணக்க மாநாட்டில், இயக்குநர் திலகம் கே. பாக்கியராஜ் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது.

18. கனடா நாட்டில் உதயன் பத்திரிக்கையின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ சர்வதேச விருது.

19. திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் வழங்கிய ‘சொல்லரசு’ விருது.

20. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது.

21. தமிழக அரசு 2014ல் வழங்கிய மகாகவி பாரதியார் விருது. (ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி மற்றும் விருது பதித்த பொற்பதக்கம்)

22. சிங்கப்பூர் அருள்மிகு இராமர் கோவில்

23. நகைச்சுவை இமயம் - நகைச்சுவையாளர் மன்றம், சென்னை

24. சொல்லேருழவர் - புதுவை இலக்கியப் பேரவை, புதுச்சேரி

25. For the sake of Honour Award

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இன்னும் பல விருதுகள். இவரது சாதனைகள் இன்னும் தொடர தங்களின் நல்லாதரவை நாடுகிறார்.